"டெங்கு பரவாமல் தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகள்"- அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடியில் அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,
"தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ராசியால்தான் கர்நாடகாவில் மழை பெய்கிறது. காவிரியில் தண்ணீர் புரண்டு வருகிறது. மேட்டூர் திறந்த சில நாட்களிலேயே கடைமடை வரை தண்ணீர் வந்து சேர்ந்தது. ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் மழையே வராது என்பது யாவரும் அறிந்ததே" என கூறினார்.