புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கறம்பக்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு கரம்பக்குடி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மனைவி காளீஸ்வரி என்பவர் கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்காக வங்கிக் கணக்கு தொடங்க சென்றுள்ளார்.
கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தினந்தோறும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக சென்ற காளீஸ்வரியை வங்கி அலுவலர்கள் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று(ஜன.9) மீண்டும் வங்கிக்கு சென்ற காளீஸ்வரி, தான் நிறைமாத கர்ப்பிணி என்றும் தன்னால் அலைய முடியவில்லை எனவே விரைந்து வங்கி கணக்கு தொடங்கி தருமாறு வங்கியின் துணை மேலாளர் இளங்கோவனிடம் கூறியதற்கு, திங்கள்கிழமை வருமாறு கூறியுள்ளனர்.