தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைக்குழந்தை விற்பனை விவகாரம்: தாயிடம் விசாரணை!

புதுக்கோட்டை: விராலிமலை அருகே கைக்குழந்தையை விற்பனை செய்ததாக, குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியம் அளித்த புகாரின் பெயரில், விராலிமலை காவல் துறையினர் தாயிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  கைகுழந்தை விற்பனை விவகாரம்: தாயிடம் காவல்துறை விசாரணை!
கைகுழந்தை விற்பனை விவகாரம்: தாயிடம் காவல்துறை விசாரணை!

By

Published : Nov 19, 2020, 8:45 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள வேலுர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த காஜிமுகமது ஆயிஷா பேகம் தம்பதிக்கு நவம்பர் இரண்டாம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே குடும்ப கஷ்டத்தில் இருக்கும் அவர்களுக்கு பெண் குழந்தையை வளர்ப்பதில் மேலும் சிரமமாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சிலரிடம் கூறியுள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெண் குழந்தையின் பெற்றோரிடம் லாவகமாகப் பேசி தனக்குத் தெரிந்தவர் ஒருவருக்கு குழந்தை இல்லை என்றும், இந்தக் குழந்தையை அவரிடம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து சிரமத்தில் இருந்த பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தை வாங்குபவரை சமத்துவபுரம் அழைத்துவந்த அந்த நபர் அவர்கள் பேசியபடி ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு குழந்தையை விற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியத்திற்கு குழந்தை விற்பனை நடந்தாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விராலிமலை சமத்துவபுரம் சென்ற அலுவலர்கள், குழந்தையை விற்ற தாயை விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details