புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் அரசுப்பள்ளி அருகே உள்ள சாக்கடையில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக எண்ணிய அப்பகுதி மக்கள் சாக்கடையின் அருகே சென்று பார்த்தனர்.
அப்போது ஒரு குழந்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்ததைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த புதுக்கோட்டை மாவட்ட நகர காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.