புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேல் மங்கலம் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் 500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் ஆபத்தான முறையில் உள்ளது.
அப்பகுதி வழியாகக் குடிநீர் எடுக்கச் செல்பவர்களும், ஓடையில் குளிக்கச் செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.
ஆபத்தான வகையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு மூடப்படாத இந்த ஆழ்துளைக் கிணற்றால் விபத்து நடப்பதற்கு முன்னரே அரசு நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் அந்த ஆழ்துளைக் கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது!