புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் ஏற்கனவே குப்பை அள்ளுவதற்கு 4 லாரிகள் மற்றும் பேட்டரியில் இயங்கும் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள் கிடைக்கும் விதமாக நடமாடும் காய்கறி வாகனங்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி அறந்தாங்கி நகராட்சி சார்பில், 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் 4 வாடகை வாகனங்களும் ஒரு நகராட்சி வாகனமும் பயன்படுத்தபட்டன. அந்த நகராட்சி வாகனம் குப்பைகளை ஏற்றிச்செல்லும் வாகனம் என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அறந்தாங்கி நகராட்சி ஆணையர்(பொறுப்பு) முத்துகணேஷ், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.