தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - 13 அம்ச கோரிக்கைகள்

புதுக்கோட்டை: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Anganwadi workers protest demanding 13 points!
ஆர்ப்பாட்ட நடத்திய ஊழியர்கள்

By

Published : Oct 28, 2020, 9:22 PM IST

புதுக்கோட்டை மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செல்வம், இணைச் செயலாளர் பத்மா, மாவட்டச் செயலாளர் பச்சையம்மாள் ஆகியோரின் தலைமையில் 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி குறைந்தபட்ச ஊதியம் 24 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,

அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், உதவியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், சுகாதாரத் துறை பணிகள் அனைத்தையும் அங்கன்வாடி ஊழியர்களைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது,

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரசவ கால விடுப்பு ஒன்பது மாதங்கள் வழங்க வேண்டும், கரோனா பணிகளில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details