புதுக்கோட்டை :திருவரங்குளம் அருகேவுள்ள வடக்கு கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (91). இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அன்றைய தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 9 ஆண்டு காலமாக பாரம்பரியமும், கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சீர் வழங்கி வருகிறார்.