புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஏனாதி பிடாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி மலையாண்டி. இவரின் வீட்டின் அருகே வைக்கோல் போர்ப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை மலைப்பாம்பு விழுங்க முயன்றுள்ளது. கோழியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அவ்வழியே வந்த குகன் என்பவர் வைக்கோல் கட்டை தூக்கியுள்ளார்.
கோழியை விழுங்க முயன்ற 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு! - 11 feet python at pudukottai
புதுக்கோட்டை: ஏனாதி பிடாரம்பட்டியில் கோழியை விழுங்க முயன்ற 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
![கோழியை விழுங்க முயன்ற 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு! மலைப்பாம்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6384684-thumbnail-3x2-dasdasddsff.jpg)
மலைப்பாம்பு
அப்போது, வைக்கோலுக்குக் கீழே 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சீறிக்கொண்டு பாய்ந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, பாம்பை ஒரு சாக்கில் பிடித்து மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதையும் படிங்க:நெடுஞ்சாலை அருகே ஆண் மான் உயரிழப்பு - வனத்துறை விசாரணை!
TAGGED:
11 feet python at pudukottai