புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் உள்ள கல்யாண ராமபுரம் பகுதியில் ஆவின் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 60ஆயிரம் விட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பால் குளிரூட்டப் பயன்படும் அம்மோனியா வாயு திடீரென கசிந்துள்ளது.
இந்தக் கசிவினால் இங்கு பணியாற்றி வரும் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அம்மோனிய வாயு வெளியாவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.