தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிராக அம்மாபட்டினத்தில் மக்கள் போராட்டம் - amma pattinam jamat protest against caa

புதுக்கோட்டை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறந்தாங்கி அருகேயுள்ள அம்மாபட்டினத்தில், ஜமாத்தார்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஏராளமானோர் பங்குபெற்றுள்ளனர்.

அம்மா பட்டினம் ஜமாத்  அறந்தாங்கி ஜமாத் போராட்டம்  amma patinam jamath protest  amma pattinam jamat protest against caa  jamath muslim protest against caa
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாபட்டினத்தில் பொதுமக்கள் போராட்டம்

By

Published : Feb 19, 2020, 2:20 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக அறந்தாங்கியிலுள்ள இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆவுடயார் கோயில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதியில் குடியரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாபட்டினத்தில் பொதுமக்கள் போராட்டம்

அதுபோல, அறந்தாங்கி அருகேயுள்ள அம்மாபட்டினம் பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் அம்மாபட்டினம் ஜமாத்தார்கள் சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே நேரத்தில் 1,100 மாணவிகள் கடிதம் எழுதி சாதனை!

ABOUT THE AUTHOR

...view details