புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து அம்மா மினி கிளினிக்கின் பணிகளையும் செயல்படும்விதத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் பேசிய அவர், "முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.