தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாங்குவதற்கு ஆளில்லாமல் வயலில் காய்ந்து உதிரும் பூக்கள்... ஊரடங்கால் பாதித்த விவசாயிகள்! - lockdown

புதுக்கோட்டை: ஊரடங்கால் பூக்கள் விற்பனையாகாமல் நஷ்டத்திற்கு ஆளாவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

-flower-farmers-of-pudukkottai-
-flower-farmers-of-pudukkottai-

By

Published : Apr 14, 2020, 1:23 PM IST

Updated : Jun 2, 2020, 5:09 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வம்பன், வம்பன் காலனி, கீரமங்கலம், கொத்தக்கோட்டை போன்ற கிராமங்களில் செண்டுமல்லிப் பூ, கோழிக்கொண்டைப் பூ, முல்லைப் பூ, மல்லிகைப் பூ ஆகியவை விவசாயம் செய்யப்படுகின்றன. தற்போது, விழாக்காலம் என்பதால் பூக்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக, கரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பூக்கள் விற்பனை குறைந்தது.

தற்போது, மக்கள் பூ வாங்க ஆர்வம் காட்டாததால், பூக்களை வாங்க வியாபாரிகளும் முன்வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, விற்பனையாகாததால், பறித்த பூக்கள் அனைத்தையும் கீழே கொட்டுகிறோம். செடியிலுள்ள பூக்கள் அனைத்தும் பறிக்காததால் காய்ந்து உதிர்கின்றன.

அரசாங்கம் பூ விவசாயத்திற்கான மானியம் எதுவும் வழங்கவில்லை. காலகாலமாக இதைதான் செய்துவருகிறோம். தற்போது, ஊரடங்கு உத்தரவால் 20 நாட்களாக பூக்களைக் கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த விவசாயத்திற்கான வருமானம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கு ஏதேனும் இழப்பீடு கொடுத்தால் உதவியாக இருக்கும் என்கின்றனர்.

ஊரடங்கால் பாதித்த பூ விவசாயிகள்

இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பு 95 வயது முதியவர் உயிரிழப்பு!

Last Updated : Jun 2, 2020, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details