கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வேலையின்மையால், அத்தியாவசிய தேவைகளுக்கே அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மக்களின் பொருளாதார நிலைகளை சீராக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாகவும், நிவாரணப் பொருள்களையும் வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அகில இந்திய விவசாய சங்க மாநில பொருளாளர் சங்கர், “நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 22 கோடி விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வழங்கிடும் நிவாரண நிதியினை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மேலும், மூன்று மாதங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை முன்கூட்டியே வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.