தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறந்தாங்கி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! - puthukottai latest news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளராக ராஜநாயகத்தை அறிவித்துள்ளனர். அதனைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி
அறந்தாங்கி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 14, 2021, 2:42 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் அதிமுக வேட்பாளராக ராஜநாயகத்தை அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை மாற்றக்கோரி அதிமுக தொண்டர்கள் 100க்கு மேற்பட்டவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து, அண்ணாசிலை வழியாக சென்று வட முருகன் கோயிலில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ராஜநாயகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதவர் எனவும், அவர் மீது பல குற்றங்கள் இருக்கின்றன எனவும் கூறினர். ஆகையால் அவரை மாற்றி அதிமுக தொண்டர்கள் யாரையாவது வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அதிமுக அறந்தாங்கியில் படுதோல்வி அடையும் என்று கூறினர்.

இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்!

ABOUT THE AUTHOR

...view details