புதுகோட்டை:ஆத்மா யோகா மையம் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி மற்றும் விருதுகள் வழங்கும் விழா புதுகோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பின்வருமாறு கூறியதாவது, "ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக இந்திய மருத்துவத்தையும் ஊக்குவிக்க வேண்டும். அதற்காக தான் யோகா, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய இந்திய மருத்துவத்தை ஊக்குவிப்பதற்கு அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக செங்கல்பட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச அளவில் யோகா மையத்தை தொடங்கியது. ஆனால் தற்போது அந்த யோகா மையங்கள் செயல்படாமல் உள்ளது.
அதிமுக ஆட்சியில் இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மருத்துவர்களும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் என்று தமிழக அரசால் அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மருத்துவர்களும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் என்று அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை.