புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஒருபுறம் ஈடுபடும் நிலையில், மற்றொரு புறம் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 29) புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கந்தர்வகோட்டை தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக... கையும் களவுமாக பிடித்த பறக்கும் படை - அதிமுக
கந்தர்வகோட்டை தொகுதிக்குள்பட்ட சுக்கிரன்விடுதி பகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ஒரு கவருக்கு ரூ.2000 என்று 26 கவர்களில் இருந்த ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்ததோடு, பின்னர் பண பட்டுவாடா செய்தவர்களை கரம்பக்குடி காவல் நிலையத்தில் வைத்து தேர்தல் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:' மத்திய அரசுடனான உறவு மாநில உரிமையை பாதுகாக்கவே...' - ஜெயக்குமார்