கரோனா தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள் திறக்கப்படாததால் வழக்கறிஞர்கள் பலர் வேலை இல்லாமல், சிரமத்தில் இருந்து வருகின்றனர். இதனால் புதுக்கோட்டையில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! - கரோனா தொற்று
புதுக்கோட்டை: இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
![இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! Advocates protest in front of Pudukkottai court entrance](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-vlcsnap-2020-07-31-12h31m34s589-3107newsroom-1596179467-269.jpg)
இந்நிலையில் மக்கள் நலன் கருதி, உடனடியாக நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தியும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துகின்ற மத்திய அரசைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் நுழைவுவாயில் முன்பு அம்மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர். இதனால், ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.