தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக - பாஜக கூட்டணி: சுமூகமாக முடிந்த தொகுதிப் பங்கீடு! - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

admk-bjp-alliance-announcement-in-pudukottai
admk-bjp-alliance-announcement-in-pudukottai

By

Published : Dec 16, 2019, 1:05 AM IST

புதுக்கோட்டையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேசப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜக போட்டியிடும் இடங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை’ என்று கூறினார்.

அமைச்சர் விஜய பாஸ்கர்

இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜாக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 14 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக போட்டியிடுகிறது.

பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், குறைந்தபட்சம் 75 முதல் 100 இடங்களைக் கேட்டிருப்போம்’ என்றார்.

இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details