தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவாமி சங்கரதாஸ் அணியின் அடடே திட்டம்! - Cinema

புதுக்கோட்டை: ஒவ்வொரு மாதமும் நலிவுற்ற சங்க கலைஞர்களுக்கு உதவிடும் வகையில் டாக்டர் எம்ஜிஆர் செவாலியே சிவாஜி கணேசன் திட்டத்தின் அடிப்படையில் ஐந்து கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என சுவாமி சங்கரதாஸ் அணியின் துணைத் தலைவர் நடிகர் உதயா தெரிவித்தார்.

actor-udhaya

By

Published : Jun 18, 2019, 9:43 AM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதையொட்டி சுவாமி சங்கரதாஸ் அணியினர் புதுக்கோட்டை நாடக நடிகர் சங்கத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது அவர்களுக்கு புதுக்கோட்டை நாடக நடிகர் அனைவரும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சுவாமி சங்கரதாஸ் அணியின் துணைத் தலைவர் நடிகர் உதயா கூறுகையில், எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளும் இல்லாமல் ஆறு மாதத்திற்குள் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்றும், இந்த அணி நாடகங்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்றும், தங்களது அறிக்கையில் உள்ள அறிவிப்புகளில் பெரும்பாலானவை நாடகக் கலைஞர்களுக்கானதுதான் எனவும் தெரிவித்தார்.

நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி

மேலும் அவர் பேசுகையில், ஒவ்வொரு மாதமும் நலிவுற்ற சங்க கலைஞர்களுக்கு உதவிடும் வகையில் டாக்டர் எம்ஜிஆர் செவாலியே சிவாஜி கணேசன் திட்டத்தின் அடிப்படையில் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட உள்ளதாகவும், எம்ஜிஆர் சிவாஜியின் திட்டத்தைக் கேலி செய்வது அவர்களையே கேலி செய்வதைப் போன்றதெனவும், நல்லவர்கள் அனைவரும் தங்கள் பின்னால் உள்ளதாகவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details