தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை - மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை: தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவ கூட்டுறவுச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள்
மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள்

By

Published : Mar 3, 2020, 9:45 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடல் ஒட்டிய பகுதியாகக் காணப்படுகிறது. இதனால் அதனைச் சுற்றியிருக்கும் மக்கள் மீன்பிடிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இரட்டைமடி வலை என்று அழைக்கப்படக்கூடிய, வலை ஒன்று இருக்கிறது. இது கடலின் ஆழம் வரைச் சென்று மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வலை மீன் இனப்பெருக்கத்திற்காக தடைசெய்யப்பட்டுயிருக்கிறது.

விடுதலைக் குமரன்

ஆனால், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வலையைக் கொண்டு, மீன்பிடித்து-வருகின்றனர். இதனால் கடல் உயிரினங்களின் அளவு குறைந்து கொண்டேவருகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவ கூட்டுறவுச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து விடுதலைக் குமரன் என்பவர் கூறியதாவது, "கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய ஊர்களில் இரட்டைமடி வலையை வைத்து, மீன் பிடித்தல் தொழிலில் அதிகமாக நடைபெற்றுவருகிறது. இதனால் கடலில் வாழும் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்துவருகிறது. இந்த வலையில் மீன் பிடிப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும்.

அதனால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரட்டைமடி வலையை வைத்திருப்பவர்களிடமிருந்து அதை உடனே பறிமுதல்செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details