புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து நார்த்தாமலை வழியாக பொம்மாடிமலைக்கு கார் ஒன்று சென்றுள்ளது. இந்த காரை அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேசன் (32) என்பவர் ஓட்டியுள்ளார். இந்த கார் நார்த்தாமலை பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நார்த்தாமலையைச் சேர்ந்த சின்னத்தம்பி (40) துவரவயலைச் சேர்ந்த பழனிசாமி (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்போது விபத்தின்போது ஜன்னத்பேகம் என்பவருக்கு கால்கள் முறிந்தது. இந்நிலையில் படுகாயம் அடைந்த ஜன்னத் பேகத்தை மீட்டு அவ்வழியாக சென்றவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் முருகேசனை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.