தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கல்லணை கால்வாய் சீரமைப்பு... ஆய்வறிக்கை பலகையை வைக்க வேண்டும்'

புதுக்கோட்டை: கடைமடைப் பகுதியில் உள்ள கல்லணை கால்வாயில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் குறித்த ஆய்வறிக்கை பலகையை வைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட்

By

Published : Jun 2, 2020, 7:43 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகம் முன்பாக மனு கொடுத்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் அமைந்துள்ள கடைமடைப் பகுதியிலுள்ள கால்வாய்கள் துணை வாய்க்கால்கள் அதன்மூலமாக நீர் நிரம்ப உள்ள ஏரி, குளங்கள் என அனைத்தையும் தூர்வார வேண்டும்.

அதற்கு ஒதுக்கிய நிதியினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனக் கோரி மனு அளித்து தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் கடைமடைப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த ஆய்வறிக்கை பலகையை வைக்க வேண்டும்.

பணிகள் அனைத்தும் முறையாக நடைபெற வேண்டும். கடைமடைப் பகுதியில் இருக்கின்ற அரசு சார்ந்த பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. அதனைச் சரிசெய்து முறையான பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன் கூறுகையில்,

"ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் கல்லணை கால்வாய் கடைமடைப் பகுதிகளில் உள்ள முக்கிய வாய்க்கால்கள், துணை வாய்க்கால்கள் அதன் அருகில் உள்ள ஏரி, குளங்கள் எதுவும் சரிசெய்யப்படாமலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளாமலும் தாமதப்படுத்திவருகினறனர்.

அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை சரியான முறையில் பயன்படுத்தி பணிகளை துரிதப்படுத்தி மேட்டூர் அணை திறப்பதற்குள் பணிகள் அனைத்தும் நிறைவேறுவதற்கு சரியான பணியாளர்களை நியமிக்க வேண்டும்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details