தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி செயலர், பணிதள பொறுப்பாளர் பணியிடை நீக்கம்!

பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததால், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு
விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு

By

Published : Jan 10, 2021, 5:02 AM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டி ஊராட்சியில் விலையில்லா ஆடுகள் வழங்க பயனாளிகளிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் வசூல் செய்த படம் சமூக வலைதளங்களில் பரவியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதில் பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள 134 பயனாளிகளில் 124 பயனாளிகளுக்கு பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் சந்தையில் கடந்த ஜனவரி 4 ம் தேதி மதியம் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. இதில் பயன்பெறும் பயனாளிகளிடம் தலா 2000 ரூபாயை ஊராட்சி செயலர் சேவக்கோன் மற்றும் பணித்தள பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் பெற்று ஆடுகளை வழங்கினர்.

இதுகுறித்த பயனாளிகளிடம் பெறப்பட்ட பணம் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கிய ஆடுகள் குறித்த வீடியோ படம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் பணம் பெறப்பட்டதாக கூறப்பட்ட பணித்தள பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலரிடம் கேட்டபோது, அவர்கள் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க கூடுதல் விலை தேவைப்படுகிறது. பணம் பத்தாத நிலையில் இருப்பதனால் கூடுதலாக வசூல் செய்வதாக கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ரூபாய் இரண்டாயிரம் கேட்டது அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றும் வழங்கப்பட்ட ஆடுகள் மிகவும் சிறிய குட்டிகளாகவும், நோய்வாய்ப்பட்ட தாகவும் உள்ளதாக ஆடு வாங்கிய பயனாளிகள் குற்றம்சாட்டினர்.

விலையில்லா ஆடு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடில் உரிய விசாரணை செய்து பயனாளிகளிடம் கட்டாயமாக ரூபாய் 2000 ரூபாயை வசூல் செய்த ஊராட்சி செயலர் சேவக்கோனை பணியிடை நீக்கம் செய்தும் நூறுநாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர் முருகேசனை பணி நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

கால்நடை மருத்துவரை துறை ரீதியாக விசாரணை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details