தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகாரிகள் அலட்சியம்? - கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்த இளைஞர்

கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து தருமாறு ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை என ஊர் மக்கள் கூறும் நிலையில், இளைஞர் ஒருவர் தானாக முன்வந்து சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இளைஞர் அஜித்
இளைஞர் அஜித்

By

Published : Nov 24, 2022, 9:31 AM IST

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெற்கு தெரு பகுதியில் அதிகளவிலான மக்கள் வசித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவு நீர் கால்வாய் சுத்திகரிப்புப் பணி அப்பகுதியில் சரிவர நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கழிவு நீர் கால்வாயை சுத்திகரிக்குமாறு அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளனர். பல்வேறு முறை கோரிக்கை வைத்தும், கால்வாய் சுத்தம் செய்ய பணி நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், கால்வாயில் தேங்கும் நீருடன் மழை நீரும் கலந்து குட்டை போல் மாறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கழிவு நீர் கால்வாயை இளைஞர் சுத்தம் செய்த வீடியோ வைரல்

ஊரின் நிலையைக் கண்ட அதேபகுதியைச்சேர்ந்த அஜித் என்ற இளைஞன், தாமாக முன்வந்து சாக்கடையினை சுத்தம் செய்யும் பணியில் களமிறங்கி உள்ளார். கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகளை இளைஞர் அகற்றிய செயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கால்வாயை இளைஞர் சுத்திகரிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:ஆளுநருடன் சுமூக உறவு... திருச்செந்தூரில் முருகனை தரிசித்தபின் புதுச்சேரி CM பேட்டி

ABOUT THE AUTHOR

...view details