புதுக்கோட்டை: திருச்சி மாவட்டம், மேல கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர், இளவரசன் (35). இவர் புதுச்சேரி முன்னாள் துணை சபாநாயகர் கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். மேலும் புதுக்கோட்டை முன்னாள் ரவுடி போஸ் நகர் பட்டு மகன் குமார் கொலை வழக்குத் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை வந்த அவரை காலை 10:30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து அவரை கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை மேற்கொண்டார்.