புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆயிங்குடி பட்டிணக்காடு பகுதியில் (ஏப்.16) ஒருவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக இறுதி யாத்திரை வாகனத்தை ஒட்டங்காட்டை சேர்ந்த சக்தி திருப்ப முயன்றுள்ளார்.
மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் பலி - புதுக்கோட்டை மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே பட்டினக்காடு கிராமத்தில், சாலையில் சென்ற இறுதியாத்திரை வாகனம் மீது மின்கம்பி உரசியதில், வாகனத்தை ஓட்டிச் சென்ற சக்திவேல் (30) என்பவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!
அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது சொர்க்க ரதம் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ஓட்டுனர் சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தகனம்செய்யப்பட்ட விவேக்கின் உடல்