தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சம் கேட்டு வந்த காதல் ஜோடிக்கு எம்எல்ஏ ஆபிஸில் திருமணம்.. கந்தர்வகோட்டை காதல் கதை! - கந்தர்வகோட்டை செய்திகள்

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் திருமணம் நடத்தப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 16, 2023, 8:56 PM IST

திருமணம் செய்து வைக்கப்பட்ட வீடியோ

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில், இந்த இருவரின் காதலுக்கு இருவரின் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனையடுத்து, திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி, கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னத்துரையை அந்தக் காதலர்கள் நாடியுள்ளனர்.

உடனடியாக, சின்னத்துரை எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே வைத்து இன்று (ஜூன் 16) காதல் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்த சிவராஜ் (30) என்ற இளைஞரும், அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா (23) என்ற இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: Sakshi Malik: பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை - அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சாக்‌ஷி மாலிக் தகவல்!

இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடும், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் முன் வராத நிலையில், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை இந்த காதல் ஜோடியினர் நாடியுள்ளனர்.

இதையும் படிங்க: Leo Update: வெளியானது 'லியோ' அப்டேட்.. லோகோஷ் கனகராஜ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

இதனையடுத்து சின்னத்துரை எம்எல்ஏ, உடனடியாக அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் அரியாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களது முன்னிலையில் சிவராஜ் மற்றும் சொர்ணபாப்பா ஆகிய இருவருக்கும் சின்னத்துரை எம்எல்ஏ காதல் திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து அங்கு இருந்த பலரின் முன்னிலையில், தடபுடலாக திருமணம் நடத்தப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

இதையும் படிங்க:'ஏட்டு எரிமலை' பாணியில் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, எம்எல்ஏ அலுவலகத்திலேயே வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: தலைக்கு எவ்வளவு தில்லு பாரு.. சீருடையுடன் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மீம்ஸ் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details