புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி சார்பாக எடுக்கப்பட்டுவருகின்றன.
முகக்கவசம் அணியாமல் நடமாடிய 82 பேரிடம் ரூ.8,250 ரூபாய் அபராதம்! - கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்
புதுக்கோட்டை: அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடிய 82 நபர்களுக்கு எட்டு ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் நடமாடிய 82 பேரிடம் 8,250 ரூபாய் அபராதம்
அதன் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் எதிரில் நகராட்சி ஆணையர், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று (செப்.5) காலை முதல் 82 பேரிடம் 8 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.