தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி.. கண்களை தானம் செய்த குடும்பத்தினர்! - விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நைனான் கொள்ளையில் விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

kesavan
கேசவன்

By

Published : Jul 17, 2023, 10:30 AM IST

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே உள்ள நைனான் கொள்ளையை சேர்ந்தவர் கேசவன் (32). கூலி விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி கால்நடைகளுக்கு தீவனம் வைக்க மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது மரத்திற்கு மேல் சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது மரக்கிளைகள் உரசியதில் கேசவன் தூக்கி வீசப்பட்டார்.

இதில், படுகாயமடைந்த விவசாயி கேசவனை அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மழையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இது சம்பந்தமாக போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு - வரும் ஜூலை 25 முதல் MBBS கவுன்சிலிங்கிற்கு வாய்ப்பு!

கேசவனின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், உயிரிழந்த கேசவனுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடந்தது. அவரது குடும்பத்தினர் சம்மதத்தோடு கேசவனின் கண்கள் அதே மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு, மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் உள்ள கண் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க:கம்பன் தான் முதல் சுயமரியாதைக்காரர்: புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் திருச்சி சிவா புகழாரம்!

பின்னர் கேசவனின் உடலை பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் அவரது சொந்த ஊரான நைனான் கொள்ளை கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர். மின்சாரம் தாக்கி கூலி விவசாயி உயிரிழந்தது ஒருபுறம் மீளா துயராக இருந்தாலும், தனது கணவன் உயிரிழந்து விட்டார். தனது கணவனின் கண்களாவது உயிர்ப்புடன் இருக்கட்டும் என்ற நோக்கத்தோடு கேசவனின் மனைவி அவரது கணவன் கண்களை கண் தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க:தொழு நோயாளிகளின் தோழன் - 21 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மணிமாறன்!

ABOUT THE AUTHOR

...view details