தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நட்ட மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் - tree activists

புதுக்கோட்டை: கீழராஜ வீதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் நடப்பட்ட மரம் வெட்டபட்டதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஊர்வலமாகச் சென்று காவல் துறையினரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.

மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்
மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

By

Published : Jun 16, 2021, 4:48 PM IST

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உள்பட்ட கீழராஜ வீதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மர ஆர்வலர்களால் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

இந்நிலையில் அந்த மரக்கன்றுகள் பெரிதாக வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று இரவு ஒரு தனியார் கடைக்கு இடையூறாக இருந்ததால் அதனை வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மர ஆர்வலர்கள் இன்று அந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்குச் சென்று காவல் துறையினரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்தனர்.

மேலும் இதுபோன்ற செயல்களில் எந்தப் பகுதிகளிலும் யாரும் ஈடுபடாதவாறு காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details