தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்னமராவதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் பாம்பு.. திண்டாடிய தீயணைப்பு வீரர்கள்! - புதுக்கோட்டை நியூஸ்

புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் பாம்புகளை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அவற்றை அடர் வனப்பகுதியில் விட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 11, 2022, 12:45 PM IST

Updated : Dec 12, 2022, 6:14 AM IST

புதுக்கோட்டை அருகே வீட்டிற்குள் நுழைந்த 6 அடி நீள பாம்பு!..

புதுக்கோட்டை:பொன்னமராவதி அருகே அம்மா நகரில் வசிப்பவர், எலக்ட்ரீசியன் பாரத். இவர் பணிக்கு சென்று விட்டு மதிய உணவிற்காக நேற்று (டிச.10) வீட்டிற்கு வந்தபோது, பாம்பு ஒன்று வீட்டிற்குள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் படி, அங்கு விரைந்த பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் வீட்டிற்குள் பதுங்கியிருந்த 6 நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதேபோல மேலும் இரண்டு வீடுகளில் பாம்புகள் பிடிபட்டன. இவ்வாறு ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பைக்கிற்காக ஆடு திருடி அகப்பட்ட கல்லூரி மாணவன்.. பொதுமக்கள் தர்ம அடி!

Last Updated : Dec 12, 2022, 6:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details