புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று எதையோ முழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்துள்ளது.
இதை கண்ட விவசாயிகள் அருகில் இருந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர். அந்த இடத்திற்கு வந்த அவர்கள் மலைப்பாம்பினைப் பிடித்து பார்த்தபோது அதன் வயிற்றின் குறுக்கில் முயல் இறந்த நிலையில் சிக்கியிருந்தது.