புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளார் பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரது அறிவுரைப்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செரினா பேகம் தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
அங்குள்ள பல்வேறு விவசாய பகுதிகளில் ஆய்வுசெய்த போது கருக்காக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த வெங்கிடு, கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த வீரமுத்து ஆகிய இருவரும் 800 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது.