தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சுதந்திரம் என்றால் என்ன" என கேட்கும் நிலையில் புதுக்கோட்டை மக்கள்! - சுதந்திரமா அப்படி என்றால் என்ன"

புதுக்கோட்டை: நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், புதுகோட்டை மக்கள் தங்கள் சுதந்திர காற்றை எவ்வாறு உள்வாங்கியுள்ளனர் என்பது குறித்த சிறப்புத் தொகுப்பை காணலாம்.

சுதந்திரமா அப்படி என்றால் என்ன" என கேட்கும் நிலையில் இருக்கும் புதுக்கோட்டை வாழ் மக்கள்

By

Published : Aug 15, 2019, 12:54 AM IST

17ஆவது நூற்றாண்டில் ரகுநாதராய தொண்டைமான் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டதுதான் புதுக்கோட்டை சமஸ்தானம். இங்கு சுதந்திரத்திற்கு முன்னால் மன்னர் ஆட்சியின் போது மக்கள் செழிப்பாகவும், எவ்வித பஞ்சமும் இன்றியும் வாழ்ந்து வந்தனர். இறுதியாக ராஜகோபால தொண்டைமான் என்கிற மன்னர் ஆட்சியின் போது மன்னராட்சி முடிவுக்கு வந்தது. புதுக்கோட்டை இதுவரை 9 மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது புதுக்கோட்டை சமஸ்தானம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின் 1948ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. அதன்பின் புதுக்கோட்டை மாவட்டம் அரசாங்கத்தால் முழுவதும் வழிநடத்தப்பட்டது.

"சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்" என்ற வரிகளுக்கு இணங்க தேசத் தலைவர்களின் கடும் முயற்சியாலும் உழைப்பாலும் கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நாம் 73ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர தின விழாவிற்கான கலை நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

"சுதந்திரமா என்றால் என்ன" என கேட்கும் நிலையில் இருக்கும் புதுக்கோட்டை மக்கள்
செழிப்பாக வாழ்ந்த புதுக்கோட்டை வாழ் மக்களிடம் சுதந்திரம் குறித்த கருத்துக்களைக் கேட்டபோது,

பெண்களுக்கு எப்போது முழுமையான விடுதலையும் பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கிறதோ அன்றுதான் உண்மையிலேயே சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்பது பெண்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும், நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. அதனால் எங்களுக்கு இந்த சுதந்திர தினம் என்பதில் எந்தவித உடன்பாடும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். வெள்ளையர்களிடம் நாம் எப்படி அடிமைப்பட்டுக் கிடந்தோமோ அதேபோலத்தான் இப்போது அரசியல்வாதிகளிடம் நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம்.

இளைஞர்கள் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே மக்களுக்குச் சுதந்திரம் என்பது கிடைக்கும். இதெல்லாம் சுதந்திர நாளே கிடையாது என்பது இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

"சுதந்திரமா அப்படி என்றால் என்ன, இருந்தால் கொஞ்சம் கொடுங்களேன் இல்லை என்றால் விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்வோம்", பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்றவை முழுமையாக எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

ஆக மொத்தத்தில் மக்களைப் பொறுத்தவரை சுதந்திர தினம் என்பது மூவர்ணக் கொடியை ஏற்றி ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள் என்பது மட்டுமே மனதில் இருக்கிறது. சுதந்திர நாட்டில் தான் நாம் வாழ்கிறோமா! என்ற கேள்வியும் அவர்களிடத்தில் மேலோங்கி நிற்கிறது.

ABOUT THE AUTHOR

...view details