கரோனா காலத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோன்று பல மாவட்டங்களிலும் சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவருகின்றன.
ஏழு வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை - 20 வயது இளைஞர் கைது! - 7 year old girl sexual abused
12:47 July 25
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் ஏழு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் வீட்டின் எதிர்புறத்தில் வசிக்கும் 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அரவிந்தைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபி தேசிய தலைவர்: பிரச்னை இதுதானாம்