தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சிறை - வன்கொடுமை செய்த முதியவருக்கு சிறை

புதுக்கோட்டை: எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

முதியவருக்கு சிறை
முதியவருக்கு சிறை

By

Published : May 5, 2021, 8:42 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சேவுகன் (65), கடந்த 2020ஆம் ஆண்டு எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் சேவுகனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதே போன்று பாதிக்கப்புக்குள்ளான சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:புறநகர் ரயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details