தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் 500 கிலோ குட்கா பறிமுதல்: தனிப்படை அமைப்பு - புதுக்கோட்டை

புதுக்கோட்டை: தட்சிணாமூர்த்தி சந்தைப் பகுதியில் 500 கிலோ குட்கா பறிமுதல்செய்யப்பட்டு தாஜுதீன் என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். மேலும், தப்பியோடிய அப்துல் சலாமைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் 500 கிலோ குட்கா பறிமுதல்
புதுக்கோட்டையில் 500 கிலோ குட்கா பறிமுதல்

By

Published : Apr 13, 2021, 9:23 AM IST

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி சந்தையில் குட்கா போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமையில் காவல் துறையினர் தட்சிணாமூர்த்தி சந்தையில் உள்ள அப்துல் கலாம் என்பவரது கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

காவல் துறையினர் நடத்திய சோதனையில் அந்தக் கடையில் 30 மூட்டைகளில் 465 கிலோ குட்கா போதைப்பொருள் விற்பனைக்குப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் குட்காவைப் பறிமுதல்செய்து, வழக்குப்பதிந்து கடையில் இருந்த தாஜுதீனை கைதுசெய்தனர். தப்பியோடிய கடையின் உரிமையாளர் அப்துல் கலாமை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:வாடிக்கையாளர்களைத் தாக்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details