தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 2 பேர் உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம் - 2 ஜல்லிக்கட்டு காளைகள் பலியான தேதி இன்று

4 killed including 2 Vanniyanviduthi Jallikattu bulls: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டிக்காக கொண்டு சென்ற 2 காளைகள் மற்றும் 2 பேர், வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 17, 2023, 11:03 PM IST

4 killed including 2 Vanniyanviduthi Jallikattu bulls: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளை இன்று (ஜன.17) ஏற்றிச் சென்ற வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 2 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. திருவரங்குளம் அருகே புதுக்கோட்டையில் இருந்து இன்று ஆலங்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை ஏற்றிக்கொண்டு சென்ற டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில், அரசுப் பேருந்து நடத்துனர் சின்ன பாண்டியன்(34), ஓட்டுநர் ரங்கசாமி(42), பேருந்து பயணிகள் பாஸ்கர்(49), நிசி சித்ரா(29), ராஜேந்திரன்(54), கருப்பையா(43) ஆகியோர் லேசான காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டாட்டா ஏசி வாகனத்தில் சென்ற ஓட்டுநர் விக்கி(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதியழகன் (25) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், டாட்டா ஏசி வாகனத்தில் பயணம் செய்த அருண் பாண்டி(20), அழகு சுசி(26), தர்ம அழகு(26), குணசீலன்(22), பாலா(21) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பங்கேற்று விட்டு திரும்புகையில் ஜல்லிக்கட்டு காளை ஏற்றி வந்த டாட்டா ஏசி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Theni Vadugapatti clashes:பொங்கலா..போர்க்களமா? கற்களை வீசித் தாக்குதல்; தேனி வடுகபட்டியில் குவிக்கப்பட்ட போலீஸார்

ABOUT THE AUTHOR

...view details