தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'60 நொடியில் 36 விரிவாக்கங்கள்': சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! - Indian book of records

புதுக்கோட்டை: 60 நொடிகளில் 36 ஆங்கில விரிவாக்கங்களை கூறி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவி சேதன்யா இடம்பிடித்துள்ளார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

By

Published : Feb 14, 2021, 3:36 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் அமைக்கும் வேலை செய்துவருகிறார். இவரின் மகள் சேதன்யாவுக்கு(6), கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயில இடம் கிடைத்தும், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே ஆன்லைன் கல்வி பயில்கிறார்.

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சேதன்யா

இந்நிலையில், மூன்று வயது முதலே பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்ற சேதன்யா, 36 ஆங்கில விரிவாக்கங்களை 60 நொடிகளில் கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, மாநிலத்தின் தலைநகரம், மாவட்டங்களின் பெயரையும் சரளமாக கூறிவரும் சேதன்யாவை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:'ஏது என்னிடமே பணம் கேட்கிறாயா...' ஓசியில் 'பப்ஸ்' தராததால் அடிதடியில் இறங்கிய போதை பாய்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details