தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கறம்பக்குடியில் காரில் கொண்டு சென்ற ரூ. 3.50 லட்சம் பறிமுதல் - etv news

புதுக்கோட்டை: கறம்பக்குடியில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 3.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

3.50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
3.50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

By

Published : Mar 14, 2021, 4:58 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யூனியன் அலுவலகம் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை சென்ற காரை மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர்.

அதில்உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட3.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழாத்தூர் கிராமம் அருகேயுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பறக்கும் படையினர், பணத்தை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பார்வையாளர் புவியரனி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், கந்தர்வகோட்டை தாசில்தார் ஆகியோர் வசம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கமல் நாளை வேட்புமனு தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details