தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்டிஓ விசாரணை! - 27 year old woman

புதுக்கோட்டை அருகே 27 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கோட்டையில் பெண் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Jun 6, 2021, 6:59 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (44). இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, மூன்று, இரண்டு வயதில் ஆண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், நேற்று(ஜூன்.6) பிரபாகரன் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

வெகு நேரமாகியும் கதவை யாரும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரபாகரன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வீட்டினுள் கிடந்த உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: 'பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details