தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்னவாசல் அருகே 30 சவரன் நகை கொள்ளை! - நகை கொள்ளை

புதுக்கோட்டை: திறந்திருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

240g gold theft in pudukkottai
240g gold theft in pudukkottai

By

Published : Aug 4, 2020, 8:53 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). வெளிநாட்டில் பணிபுரிந்த இவர் தற்போது சொந்த ஊரில் வசித்துவருகிறார். இவருக்கு நித்யா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் நித்யாவிற்கு சில நாள்களில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தால், திருமணத்திற்காக 30 பவுன் தங்க நகையை வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு(ஆக.3) வீட்டில் கதவு திறந்து இருப்பதை மறந்துவிட்டு தங்கராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் மாடியில் உறங்க சென்றுள்ளனர். திறந்திருந்த வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையறிந்த தங்கராஜ் அன்னவாசல் காவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details