தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் லாரி மோதி 15 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு - குற்றச் செய்திகள்

புதுக்கோட்டையில் லாரி மோதியதில், சாலையோரம் படுத்திருந்த 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் லாரி மோதி 15 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
புதுக்கோட்டையில் லாரி மோதி 15 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

By

Published : Jul 22, 2021, 10:33 PM IST

புதுக்கோட்டை: சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி பகுதி ஏ.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதி (40). இவர் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் கிடை அமைத்து, செம்மறி ஆடுகள் மேய்த்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று (ஜூலை 22) ஆடுகளை மேய்த்துவிட்டு, அரிமளம் - திருமயம் செல்லும் சாலை ஓரம் ஆடுகளை கிடையில் அடைத்து வைத்துள்ளார். அப்போது கிடையில் அடைக்கப்பட்டிருந்த 15 ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தன.

அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது மோதியது. இதில் 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தது. இவற்றின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும்.

இதுகுறித்து பரமக்குடியைச் சேர்ந்த ராமு, அரிமளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநர் ஆளப்பிறந்தான் உடையப்பன் (40) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details