தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை: கரோனாவிலிருந்து குணமடைந்த 14 வயது சிறுமி! - A 14-year-old girl from Corona   Heal

புதுக்கோட்டை: கரோனா பெருந்தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 14 வயது சிறுமி குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

கரோனாவில் இருந்து குணமடைந்த சிறுமி
கரோனாவில் இருந்து குணமடைந்த சிறுமி

By

Published : May 14, 2020, 10:24 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஆயிங்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் தனது தந்தையின் சந்தைக் கடையிலிருந்து சொந்த ஊரான புதுக்கோட்டை திரும்பினார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்தச் சிறுமிக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் குணமடைந்துள்ளதால், நேற்று அவர் தனது சொந்த ஊரான ஆயிங்குடிக்குத் திரும்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஆறாக உள்ளது.

அதில் ஒருவர் ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தச் சிறுமி குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விலக்கு!

ABOUT THE AUTHOR

...view details