பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கும் கொடூர சம்பவங்களையே இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில், ஆண் குழந்தை மோகம் பல குற்ற செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே தண்ணீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி காட்டுப் பகுதிக்குள் இருந்த முள்புதரில் கழுத்தில் காயத்துடன் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து கந்தர்வகோட்டை காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிசிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி காட்டுப் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் அவரது பெற்றோருக்கு மட்டுமில்லாது ஊரையே அதிர்ச்சியில் உறையவைத்தது.
சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்காகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என உறுதியளித்தார்.
இதனையடுத்து, சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடற்கூறாய்வு முடிவுகளில் கழுத்தை நெரித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவே பதிவானது. இதையடுத்து சிறுமியின் மரணத்தில் மேலும் சில சந்தேக முடிச்சுகள் விழுந்தன. குழம்பிப்போயிருந்த காவல் துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
கொலையும் பின்னணியும்