தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன் - ETV Bharat

தேசிய வருவாய் வழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி அருகே உணவு உண்ணும் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
அறந்தாங்கி அருகே உணவு உண்ணும் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

By

Published : Jul 26, 2021, 8:52 AM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கி தாலுகா சிட்டாங்காடு கிராமத்தில் ஸ்ரீ சித்திவிநாயகர், பாலமுருகன் ஆலயத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் தொடர்ச்சியாக 12 லட்சம் மதிப்பீட்டில் உணவு கூடம் கட்டப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மெய்யநாதன் தேங்காய் உடைத்து, முதல் செங்கலை பூமியில் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் அதே வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து

தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து

அதனைத்தொடர்ந்து திருநாளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஐந்து பேர், தேசிய வருவாய் வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படவுள்ளது. இந்நிகழச்சியில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். .

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'செல்போன் ஒட்டுகேட்பு காங்கிரஸ் கலாச்சாரம் - பாஜக குற்றச்சாட்டு'

ABOUT THE AUTHOR

...view details