தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் வாக்களித்த 104 வயது முதியவர்! - வாக்குப்பதிவு

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலில் ராயவரம் பகுதியை சேர்ந்த 104 வயது முதியவர் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.

தேர்தலில் வாக்களித்த 104 வயது முதியவர்

By

Published : Apr 18, 2019, 11:05 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் பகுதியை சேர்ந்த 104 வயதுடைய பழனியப்பச் செட்டியார் என்ற முதியவர், தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். இவர் மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக உள்ளார்.


பின்னர் அவரை சந்தித்து தற்போதைய தேர்தல் கலநிலவரம் குறித்து செய்தியாளர் கேட்டபோது, அவர் கூறியதாவது:

"எந்த தலைவர்கள் இருந்தாலும், இறந்தாலும் மக்களுக்கு சேவை செய்யும் நல்லவர்கள் வந்தால் நாடு நன்றாக இருக்கும்.மக்கள் அனைவரும் கவனமாக ஓட்டு செலுத்த வேண்டும்.

நாட்டில் இருக்கும் சாலை பிரச்சினைகள், குடிநீர் பிரச்சனைகள் அனைத்தையும் வரப்போகிற ஆட்சி தீர்த்து வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில், நான் வாக்களிப்பது 17வது முறை.

நான் உயிருடன் இருக்கும் வரை தேர்தல் வரும்போதெல்லாம் நிச்சயம் வாக்களிப்பேன். 104 வயதானாலும் நான் தற்போது நன்றாக இருக்கிறேன்.அதற்கு காரணம் நல்ல எண்ணம், அளவான உணவு, அமைதியான சூழல், இசை போன்றவைதான்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல எண்ணத்துடன் ஆரோக்கியமான உணவுடன் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நூறு வயதைக் கடந்தாலும் நன்றாக இருப்பார்கள்.

மக்களுக்கு நல்லது செய்யகூடியவர்களை கண்டறிந்து, அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தேர்தலில் வாக்களித்த 104 வயது முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details