புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் குடிகாட்டிவயல் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து, இவருடைய மகள் வேம்பரசி. இன்று காலை வேம்பரசி, அவர்களது வயலில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக தனது நண்பர்களோடு சென்றுள்ளார்.
100அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் வேம்பரசி மூச்சுத் திணறி கிணற்றுக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பெற்றோர் கிணற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இது குறித்த தகவல் அறிந்து கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் உடையாளிப்பட்டி காவல்துறையினர், கீரனூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி வேம்பரசியின் உடல் மூழ்கிய இடத்தை நவீன கேமரா கொண்டு தேடினர். தொடர்ந்து நான்கு மோட்டார்கள் கொண்டு கிணற்றிலிருந்து நீர் இறைக்கப்படது.