தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயில் கருகிய குழந்தைகளுக்கு இளைஞர்கள் நினைவஞ்சலி! - பள்ளி குழந்தைகள் கருகி சாம்பல்

பெரம்பலூர்: கும்பகோணம் தீ விபத்து சம்பவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு மற்றும் இளைஞர்கள் இயக்கம் சார்பாக மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கும்பகோணம் தீ

By

Published : Jul 17, 2019, 7:40 AM IST

2004ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயங்கர தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி சாம்பலாகினர். இந்த துயர சம்பவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்க்கப்பட்டது.

தீயில் கருகிய குழந்தைகளுக்கு, இளைஞர் குழு நினைவஞ்சலி!

இதற்காக, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில், பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு மற்றும் இளைஞர்கள் இயக்கம் சார்பாக 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். இதில், இளைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details